நடிகை பிரியா பவானிக்கு இப்போது அடுத்தடுத்த ஆஃபர் வந்துகொண்டிருக்கிறது. கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் மூலம் இவருக்கும் ரசிகர்கள் கிடைத்தார்கள்.
இப்போது மேயாத மான் படத்தின் மூலம் சிறிய பிரபலமாகிவிட்டார். இப்படத்தின் பின்பு கார்த்திக் நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் கமிட்டானார்.
தொடர்ந்து விஜய் சேதுபதி நடிக்கும் ஜுங்கா படத்தில் இரண்டாவது ஹீரோயினாக கமிட்டானார். தற்போது இவர் கரு.பழனியப்பன் இயக்கும் படத்தில் நடிக்கயிருக்கிறாராம்.
இதில் அருள்நிதி ஹீரோவாக நடிக்க, டி.இமான் இசையமைக்கிறாராம்.