Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

போட்டியாக இறக்கப்படும் வெளிநாட்டு நடிகை! எமிஜாக்சனுக்கு மறுப்பு சொன்ன தயாரிப்பாளர்

ஹிந்தியில் ஹிட்டான குயின் படத்தின் ரீமேக் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளிலும் எடுக்கப்படுகிறது. இதில் கன்னடத்தில் பட்டர்ஃபிளை என்ற பெயரில் உருவாகும் இப்படத்தில், கங்கனா ரோலில் பாருல் யாதவ் மற்றும் லிசா ஹைடன் கேரக்டரில் எமிஜாக்சன் நடிப்பதாக இருந்தது.

எமி இரண்டாவது ஹீரோயின் என்றாலும் அவருக்கு ரூ 4 கோடி சம்பளம் பேசப்பட்டதாம். ஆனால் அவர் சூப்பர் கேர்ள்ஸ் என்ற டிவி ஷோவில் பிசியாக இருப்பதால், இப்படத்தில் நடிக்க கால்ஷீட் இல்லையென கூறிவிட்டாராம். மேலும் அவர் இயக்குனரை சந்தித்தேன் கதையில் மாற்றம் செய்துவிட்டார்கள்.

அது எனக்கு சரிவராது என கூறி விலகியதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் மனுகுமரன் எமி சொன்னதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் இயக்குனரை சந்திக்கவில்லை. மற்ற மொழிகளுக்கு ஏற்ப கதையில் சிறு மாற்றம் செய்துள்ளோம். தற்போது எமிக்கு பதிலாக எல்லி அவ்ரம் என்ற வெளிநாட்டு நடிகை நடிக்கிறார் என அவர் கூறியுள்ளார்