Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சென்னை, மெரினாவில் ஷூட்டிங் நடத்த தடை! இது என்ன சோதனை

சினிமாவில் காதல் காட்சிகள் இல்லாமல் இருக்கமுடியாது. கடற்கரையில் ஒரு காட்சியாவது இடம் பெறவேண்டும் என ஷூட்டிங் நடத்தும் இயக்குனர்களும் உண்டு. காதலுக்கும் கடற்கரைக்கும் அப்படி ஒரு பொருத்தம்.

சென்னைக்கு அழகே மெரினா கடற்கரை தான். மிக நீளமான கடற்கரையான இதில் அப்போது முதல் இப்போது வரை பல படங்கள் ஷூட்டிங் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இனி மெரினா முதல் பெசன்ட் நகர் கடற்கரை வரை சினிமா பட ஷூட்டிங் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பகல் நேரங்களில் சென்னையின் நகர் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தவும் தடை போடப்பட்டுள்ளது. மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு புரட்சிக்கு பிறகு கூட்டம் போட தடை என பல விதிமுறைகள் போட்டப்பட்டு வரும் இந்நிலையில் அதன் விளைவு தான் இதுவும் என கூறுகின்றனர்.