Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

200 வருட பழமையான கோட்டையில் நடிகை திரிஷா!

நடிகர் திரிஷா இன்னும் சில ரசிகர்களில் கனவுக்கன்னியாக உள்ளார். அவர் தற்போது பரமபதம் என்னும் படத்தில் நடித்து வருகிறார். இதில் படப்பிடிப்பு வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஷூட்டிங்காக ஆற்காட்டில் உள்ள கோட்டைக்கு சென்றுள்ளார்கள். இந்த கோட்டை 200 ஆண்டுகள் பழமையானதாம்.

வரலாற்று சிறப்பு பெற்ற இக்கோட்டையை மன்னர் ஔரங்கசிப் ஆண்டுள்ளார். 15 நாட்கள் நடந்த முதல் கட்ட படப்பிடிப்பை தொடர்ந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறுகிறது.

திரில்லர், திகில் படங்களில் நடித்துவரும் திரிஷா இதில் டாக்டராக நடிக்கிறாராம். பெண்களை மையப்படுத்திய இக்கதையை திருஞானம் இயக்க படத்திற்கு அம்ரிஷ் இசையமைக்கிறார்.