Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அண்ணன், தம்பியான சூர்யா, கார்த்தி இன்று ஒன்றாக இணைந்தனர்!

தமிழ் சினிமாவின் மார்கண்டேயர் என அழைக்கப்படும் சிவக்குமார் தன் இரு மகன்களையும் தன்னை போலவே எளிமையான பாதையில் அழைத்து செல்கிறார். சூர்யா, கார்த்தி இருவருமே படங்களில் பிசியாக இருக்கிறார்.

குடும்பத்தில் ஒன்றாக இருக்கும் இவர்கள் இருவரும் படத்திலும் ஒன்றாக இணைகிறார்கள். சூர்யா தயாரித்து நடித்த பசங்க படத்தை இயக்கியவர் நடிகர் பாண்டிராஜ். இன்று மீண்டும் புதிய படத்தை இன்று தொடங்கியுள்ளார்.

கார்த்தி ஹீரோவாக நடிக்கும் இப்படத்தின் படபூஜை இன்று சிறப்பாக நடைபெற்றது. இதில் நடிகை சயீஷா சைகல் ஹீரோயினாக நடிக்க சூர்யா இப்படத்தை தயாரிக்கிறார். காமெடிக்கு நடிகர் சூரி.

படபூஜையை சூர்யாவின் அம்மா லட்சுமி விளக்கேற்றி தொடங்கிவைக்க, படப்பிடிப்பு சென்னையில் 5 நாட்களும், தென்காசியில் 40 நாட்களும் நடக்க இருக்கிறது.