Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வேலைக்காரன் படத்தில் மெர்சல் ஸ்பெஷல்! பிரபல விஜே, ஆர்.ஜேயுடன் இசை வெளியீட்டு விழா - நயன்தாரா வருவாரா

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ள வேலைக்காரன் படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போதைய சமூக வலைதள ட்ரண்டிங். இதற்காக #VelaikkaranAlbumFromDec3 தனி டேக் உருவாக்கிவிட்டார்கள்.

இப்படத்தின் அனைத்து பாடல்கள்களையும் மெர்சல் படத்தில் பாடலாசிரியராக இருந்த விவேக் தான் எழுதியுள்ளார். அனிருத் இசையமைப்பில் ஏற்கனவே இறைவா, உயிரே பாடல்கள் ஹிட்டாகி விட்டது.

இன்னும் சில பாடல்கள் இன்று வெளியாகவுள்ள நிலையில் இதற்கான விழா சென்னையில் இன்று மாலை நடைபெறவுள்ளது. இதில் சிவகார்த்திகேயன், அனிருத், மோகன் ராஜா, ஃபாகத் கலந்துகொள்கிறார்கள்.

மேலும் நயன்தாரா வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.சிறப்பாக நடைபெறவுள்ள இவ்விழாவை பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளரான டிடியும், ஆர்.ஜே.விக்னேஷ் ஆகியோர் தொகுத்து வழங்குகிறார்கள்.