Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

2.0 பற்றி பரவும் வதந்தியை மறுத்த லைகா நிறுவனம்

பிரம்மாண்ட பட்ஜெட்டில் ஷங்கர் இயக்கிவரும் 2.0 படம் முதலில் இந்த வருடம் தீபாவளிக்கு வெளிவருவதாக இருந்தது, ஆனால் பின்னர் 2018 ஜனவரிக்கு தள்ளிவைக்கப்பட்டது. அதன்பின்னர் மீண்டும் 2018 ஏப்ரல் மாதத்திற்கு தற்போது தள்ளிபோனது.

இதற்கு காரணம் ஒரு அமெரிக்க நிறுவனம் vfx பணிகளை முடிப்பதில் ஏற்படுத்திய தாமதம் தான் எனவும், அந்த நிறுவனம் மீது லைகா நிறுவனம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தகவல் பரவியது.

இந்த செய்தி முற்றிலும் வதந்தி என தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. vfx பணிகளை முடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது உண்மை தான், நேரத்தை கவனத்தில் கொண்டு vfx தரத்தில் குறைந்துவிடக்கூடாது என்பதால் தான் ஏப்ரல் மாதத்திற்கு படம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது என லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது.