Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உனக்கு பாட்டியாக கூட நான் நடிப்பேன்: நிவேதா பெத்துராஜ்

ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் பிரபலமானவர் நிவேதா பெத்துராஜ். அதற்கு பிறகு அவர் நடித்த பொதுவாக என்மனசு தங்கம் படம் கைகொடுக்கவில்லை. தற்போது ஜெயம் ரவியின் டிக் டிக் டிக் மற்றும் வெங்கட் பிரபுவின் பார்ட்டி ஆகிய படங்களில் அவர் நடித்துள்ளார்.

இன்று டிக் டிக் டிக் படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகவுள்ள ஜெயம் ரவியின் மகன் ஆரவ் ரவியும் இந்த விழாவில் கலந்துகொண்டார்.

ஆரவ் பற்றி மேடையில் பேசிய நிவேதா பெத்துராஜ், "நீ இப்போது தான் முதல் படத்தில் நடித்துள்ளாய்.. உன்னுடைய 100வது படத்திலும் நான் நடிப்பேன்.. அது உன்னுடைய பாட்டி ரோலாக கூட இருக்கலாம்" என கூறினார்.