Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஜெயம் ரவியின் அடுத்த படம் பற்றிய உண்மை தகவலை வெளியிட்ட இயக்குனர்

நடிகர் ஜெயம் ரவியின் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அவரது நடிப்பில் விண்வெளி அறிவியலை மையப்படுத்திய முதல் படமான டிக் டிக் டிக் விரைவில் வெளியாகவுள்ளது.

ஏற்கனவே கமிட்டாகியிருந்த சங்கமித்ராவை தொடர்ந்து ஆவ்ர் வேறொரு படத்திலும் கமிட்டாகியுள்ளார். என்றென்றும் புன்னகை படத்தின் இயக்குனர் அஹமத் இப்படத்தை இயக்கவுள்ளார்.

ஆனால் இப்படம் அகஷ்ய் குமார் நடிப்பில் 2015 ல் வெளியான பேபி படத்தின் ரீமேக் என தகவல் வெளியாகியது. இதை இயக்குனர் அஹமத் தற்போது மறுத்துள்ளார். தனது இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் படம் உண்மையான கதை.

பணிகள் நடந்துவருகிறது. விரைவில் ஷூட்டிங் தொடங்கும் என அவர் நாளிதழ் பேட்டியில் கூறியுள்ளார்.