Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தானா சேர்ந்த கூட்டம் மோசமான வசூல்! பிரபல திரையரங்கம் அதிர்ச்சி தகவல்

தானா சேர்ந்த கூட்டம் படம் உட்பட பொங்கலுக்கு வந்த எந்த படமும் ஹிட் இல்லை என ஒரு விமர்சகர் ட்விட்டரில் பதிவிட்டதற்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் கோபமாக பதிலளித்திருந்தார்.

" என் ஆபிசுக்கு வந்து காசுக்காக பிச்சை எடுக்குறீர்கள், பின்னர் படம் பிளாப் என பதிவிடுகிறீர்கள்" என அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் சென்னை ரோகினி திரையரங்கின் நிர்வாக இயக்குனர் ட்விட்டரில் தானா சேர்ந்த கூட்டம் வசூல் பற்றி ட்விட்டரில் கூறியுள்ளார்.

"இந்த வருடம் பொங்கலுக்கு வந்த படங்களின் மொத்த வசூல் சென்ற வருடம் வந்த பைரவாவின் வசூலை நெருக்க கூட முடியவில்லை" என அவர் கூறியுள்ளார்.