Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நயன்தாராவிற்காக கடும் ரிஸ்க் எடுக்கும் நிவின் பாலி

மழையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நிவின் பாலி. இவருக்கு தமிழ்நாட்டிலும் அதிக ரசிகர்கள் உள்ளனர்.

நடிகை த்ரிஷாவோடு அவர் நடித்திருந்த ஹே ஜூட் படம் சமீபத்தில் திரைக்கு வந்து நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.

அடுத்து நிவின் பாலி ‘லவ் ஆக்‌ஷன் டிராமா’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார். அதில் அவருடன் நயந்தாரா நடிப்பதால் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது.

மலையாள முன்னணி இயக்குனர் சீனிவாசன் கதை எழுதியுள்ள இந்த படத்திற்காக நிவின் பாலி 10 கிலோ உடல் எடையை குறைக்க வேண்டும் என இயக்குனர் தயன் ஸ்ரீனிவாசன் கூறிவிட்டாராம்.

அதற்காக தற்போது உடலை வருத்தி எடை குறைக்க முயற்சி செய்து வருகிறாராம் நிவின் பாலி.