Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நாப்கின்ஸை மையமாக வைத்து வெளியான பேட் மேன் முதல் நாள் வசூல்! ஆச்சர்யத்தில் படக்குழு

வட இந்தியாவில் மட்டுமல்ல, தமிழகத்திலும் தற்போது கலக்கி வரும் படம் பேட் மேன். பாலிவுட் அக்‌ஷய் குமார், ராதிகா ஆப்தே, சோனம் கபூர் நடிக்க சானிட்டரி நாப்கின்ஸை மையமாக வைத்து வெளியானது.

இதற்கு பிரபலங்கள் பலரும் விளம்பரம் செய்தார்கள். தமிழநாட்டில் குறைந்த விலைக்கு பெண்களுக்காக சுகாதாரத்தை முன்னிறுத்திய கோவை தொழிலதிபரை மையமாக வைத்து படம் எடுக்கப்பட்டுள்ளது.

பெண்கள் மத்தியில் படத்திற்கு நல்ல வரவேற்பு. இந்நிலையில் தற்போது இப்படம் முதல் நாளே ரூ 10.26 கோடி வசூல் செய்துள்ளது. வார இறுதியான இன்றும், நாளையும் படம் இன்னும் வசூல் அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.