Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அனைவரும் எதிர்பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் காலா! ரிலீஸ் தேதி இதோ

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படம் எப்போது என்பது தான் ரசிகர்கள் பலரின் கேள்வி. ஏற்கனவே 2.0 படத்தின் மீதான எதிர்பார்ப்பு இருந்த வேளையில் படம் தள்ளிப்போனது.

கபாலி படத்தை தொடர்ந்து மீண்டும் ரஞ்சித் ரஜினியை வைத்து படம் இயக்கியுள்ளார். இந்நிலையில் இதற்கான ரிலீஸ் தேதியை படக்குழு இன்று அறிவிப்பதாக செய்திகள் வெளியிட்டது.

மும்பையில் வாழ்ந்து தமிழர்கள் பலருக்கும் உதவி செய்த ஒரு தமிழனின் வாழ்க்கையை மையமாக வைத்து படம் உருவாகியுள்ளது. தற்போது பலரும் எதிர்பார்த்திருக்கும் நேரத்தில் படத்தின் தேதியை அறிவித்துவிட்டார்கள்.

வரும் ஏப்ரல் 27 ல் படம் தியேட்டர்களில் இறங்கப்போகிறது என்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. அவரின் மருமகனான நடிகர் தனுஷ் இது பற்றிய அதிகாரப்பூர்வ தகவலை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

அவர் தான் இப்படத்தை தயாரிக்கிறார் என்பது கூடுதல் தகவல்.