Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாராட்டுகளை வாங்கிய அருவி படத்திற்கு பின்னால் இப்படி ஒரு சோகம்!

சமீபத்தில் பலரின் பாராட்டுக்களை அள்ளிய சிறு பட்ஜெட் படம் அருவி. ரஜினி முதலான திரை பிரபலங்கள் கூட படக்குழுவை வாழ்த்தினர். படத்திற்கு பல விருதுகள் வெகு சீக்கிரத்திலேயே கிடைத்தது.

தயாரிப்பாளர் சங்கம் தியேட்டர்களில் டிஜிட்டல் ஒளிபரப்புக்கு அதிக கட்டணம் வசூலிப்பதை எதிர்த்து மார்ச் 1 முதல் வேலை நிறுத்தம் செய்ய இருப்பதாக ஏற்கனவே வரும் அறிவித்தது.

இந்நிலையில் டிஜிட்டல் முறையில் Visual Projection Fees க்கு அதிக கட்டணம் செலவாகிறதாம். அருவி படத்தின் பட்ஜெட்டே ரூ 2 கோடி. ஆனால் VPF க்கு அவர்கள் ரூ 50 லட்சம் கொடுத்திருக்கிறார்கள்.

ஆனால் அதன் நிகர விலை என்னவோ ரூ 15 லட்சம் தானாம். 4 படங்களுடைய VPF க்கு ரூ 2.20 கோடி கட்டியிருக்கிறார்கள். இதில் அதிக செலவான ரூ 1.50 கோடியை சேமித்து வைத்திருந்தால் இன்னொரு படம் எடுத்திருக்கலாம் என புலம்பியிருக்கிறார்கள் படக்குழுவினர்.