Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முன்னணி ஹீரோவுக்கு வில்லனாக நடிக்க கமிட்டான விவேகம் வில்லன்

தல அஜித் நடித்த விவேகம் படத்தில் வில்லனாக நடித்திருந்தவர் விவேக் ஓபராய். பாலிவுட்டில் பிரபல நடிகரான இவரை தமிழில் வில்லனாக அறிமுகப்படுத்தியிருந்தார் இயக்குனர் சிவா.

தற்போது விவேக் ஓபராய் தெலுங்கு சினிமாவில் வில்லனாக அறிமுகமாகவுள்ளார். போயபடி ஸ்ரீனு இயக்கத்தில் அடுத்து ராம்சரண் நடிக்கவுள்ள படத்தில் தான் விவேக் ஓபராய் வில்லனாக நடிக்கவுள்ளார்.

விவேகம் படத்தில் விவேக்கின் நடிப்பை பார்த்துவிட்டு தான் இயக்குனர் அவரை தேர்ந்தெடுத்துள்ளார் என டோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.