Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நீண்ட நாட்களுக்கு பிறகு சமந்தா படம் மூலம் என்ட்ரி கொடுக்கும் ஹீரோயின்!

சமந்தாவுக்கு தற்போது படங்கள் வரிசை கட்டி நிற்கிறது. சிவகார்த்திகேயனுடன் சீமராஜா, விஷாலுடன் இரும்பு திரை, தெலுங்கில் ராம்சரணுடன் ரங்கஸ்தலம், கீர்த்தி சுரேஷ் உடன் மகாநதி என லிஸ்ட் உள்ளது.

இதெல்லாம் இருந்தாலும் அடுத்து கன்னடத்தில் வெளியாகி ஹிட்டான U Turn படத்தின் தெலுங்கு, தமிழ் ரீமேக்கில் அவர் நடித்து வருகிறார். இப்படத்தில் தற்போது நடிகை பூமிகாவும் இணைந்துள்ளார்.

நடிகை பூமிகா நீண்ட நாட்களுக்கு பின் தமிழ் சினிமாவிற்குள் வருகிறார். பத்ரி, ரோஜாக்கூட்டம், சில்லுனு ஒரு காதல் ஆகிய படங்கள் அவருக்கு முக்கிய இடத்தை கொடுத்தது. கடைசியாக அவர் தமிழில் நடித்தது 2013ல் தான்.