Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சமந்தாவுக்கு ரகசியமாக இவ்வளவு பணம் கொடுக்கப்பட்டதா! எதற்காக? வெளியான உண்மை

நடிகை சமந்தா திருமணத்திற்கு பிறகு தற்போது மீண்டும் அதே புத்துணர்வுடன் நடித்து வருகிறார். சீமராஜா, இரும்பு திரை, ரங்கஸ்தலம், மகாநதி என பல படங்கள் வரிசை கட்டி நிற்கிறது.

அதே வேளையில் குடும்பத்தை கவனித்து வருவதோடு கைத்தறி நெசவாளர்களுக்கு ஆதரவாக இறங்கியுள்ளார். அவர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் சமந்தா விழிப்புணர்வை நடத்தி வருகிறார்.

இதற்காக சமந்தாவிற்கு விளம்பர தூதுவர் பொறுப்பு கொடுக்கப்பட்டு தெலுங்கானா அரசு சார்பில் அதிக சம்பளம் அவருக்கு கொடுக்கப்பட்டதாக சர்ச்சைகள் வெடித்தது. அவருக்கு எதிர்ப்புகளும் கிளம்பியது.

இந்நிலையில் அம்மாநில அரசு, சமந்தா கைத்தறி துணிகளுக்காக அவராக முன்வந்து பிரச்சாரம் செய்கிறார். அதை ஏற்றுக்கொண்டோம். ஆனால் அவருக்கு இதற்காக சம்பளம் எதுவும் கொடுக்கப்படவில்லை.

தன்னார்வத்துடன் இலவச சேவையாக தான் அவர் செய்கிறார் என கூறியுள்ளது.