நடிகை ஸ்ருதி ஹாசன் சங்கமித்ரா படத்தில் நடிப்பதாக முதலில் ஒப்புக்கொண்டு பின் அதிலிருந்து வெளியேறினார். அதன் பின் அவர் எந்த படங்களும் ஒப்புக்கொள்ளவில்லை. அதனால் அவரது ரசிகர்கள் கொஞ்சம் ஏமாற்றத்தில் இருந்தனர்.
இந்நிலையில் ஸ்ருதிஹாசன் தற்போது ஒரு பாலிவுட் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்த வித்யூத் ஜம்வால் அடுத்து Mahesh Manjrekar இயக்கத்தில் நடிக்கவுள்ள படத்தில் தான் ஸ்ருதி ஹாசன் ஹீரோயினாக நடிக்கிறார்.
ஷூட்டிங் அடுத்த மாதம் மும்பையில் துவங்கவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.