Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அறம் நயன்தாராவின் அடுத்த படையெடுப்பு! அமர்க்கள ஆரம்பம்

நயன்தாரா சினிமாவில் தனி ஒருத்தியாக இருந்து சாதிக்க முடியும் என காட்டியவர். கொலையுதிர்காலம், கோலமாவு கோகிலா, விசுவாசம் என அவரின் படங்கள் தொடர்ந்து வரவுள்ளது.

சமீபத்தில் நயன்தாராவுக்கு ஒரு சமூக பொறுப்பை ஏற்படுத்தி கொடுத்த படம் அறம். பொதுமக்கள், அரசு ஊழியர்கள், சினிமா பிரபலங்கள் என அனைவரின் மத்தியிலும் நல்ல வரவேற்பு.

இதனால் இப்படத்தின் அடுத்த பாகத்தை எடுக்க இயக்குனர் நயினார் கோபி முன்வந்தார். நயன்தாரா நடிக்கும் இந்த அறம் 2 படத்தின் படப்பிடிப்புகள் செப்டம்பர் மாதம் தொடங்கும் என அவரின் தரப்பு கூறியுள்ளது.

மேலும் இப்படத்தில் அம்பேத்கரின் கொள்கைகள், சமயம் சார்ந்த விசயங்கள் இருக்குமாம். சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் இதில் நடிப்பதாக சொல்லப்படுகிறது.