Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஒரே நாளில் இத்தனை ஆயிரம் டிக்கெட்டா..! பாகுபலி சாதனையை நெருங்கிய அவெஞ்சர்ஸ்

ஹாலிவுட்டில் பிரபலமான 22 சூப்பர்ஹீரோக்கள் ஒன்றாக தோன்றும் Avengers: Infinity War படம் நாளை திரைக்கு வருகிறது. இந்த படத்திற்கு பாகுபலி படத்திற்கு கிடைத்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதை நிரூபிக்கும் விதத்தில் ரிசர்வேஷன் துவங்கிய சில மணி நேரங்களில் இந்தியாவில் 50 ஆயிரம் டிக்கெட் விற்பனை ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. ஒரு ஹாலிவுட் படத்திற்கு இந்தியாவில் இதுதான் அதிகபட்சம்.

இருப்பினும் Avengers: Infinity War பாகுபலிக்கு அடுத்த இடத்தையே பிடிக்க முடிந்தது.

இந்த படம் இந்தியாவில் மட்டும் நான்கு மொழிகளில் 2000 திரையரங்குகளில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.