Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விசுவாசம் அஜித் கதாபாத்திரம் பற்றி கசிந்த புதிய தகவல் - ரசிகர்கள் கொண்டாட்டம்

தயாரிப்பாளர் சங்கம் வேலைநிறுத்தம் காரணமாக ஷூட்டிங் துவங்காமல் தள்ளிப்போன நிலையில், தல அஜித்தின் விசுவாசம் படத்தின் படப்பிடிப்பு ஒருவழியாக தற்போது துவங்கியுள்ளது.

ஒரு பெரிய கிராமம் போன்ற செட் போடப்பட்டுள்ள நிலையில் முதல் நாளிலேயே ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. மேலும் படக்குழுவினருடன் அஜித் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் தல அஜித்திற்க்கு இந்த படத்தில் இரட்டை வேடம் என்று ஒரு புதிய தகவல் பரவிவருகிறது. ஒன்று வயதானவராகவும், மற்றொன்று இளமையாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் இது உண்மையா என்பதை படக்குழு தான் அறிவிக்கவேண்டும்.

இளம் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.