Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தனுஷ் மீது ரஜினிக்கு அப்படி என்ன கோபம்? காலா படத்தில் நடந்த குழப்பம்

நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் காலா படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. அதை நடிகர் தனுஷ் தயாரித்துள்ளார் - லைகா நிறுவனம் வாங்கி வெளியிடுகிறது.

முதல்முறையாக ரஜினியை வைத்து படம் தயாரிக்கும் வாய்ப்பு தனுஷுக்கு கிடைத்தது. இதில் எப்படியாவது ரஜினியுடன் ஒரு காட்சியிலாவது திரையில் தோன்றிவிட வேண்டும் என ஆசைப்பட்டாராம் அவர். அதுபற்றி இயக்குனர் ரஞ்சித்திடமும் பேசினாராம்.

ஆனால் ரஜினியோ இதை கேட்டு 'தனுஷ் என்னுடன் நடிக்க வேண்டாம்' என கூறிவிட்டாராம்.

எதற்காக இப்படி சொன்னார், அவர் மீது அப்படி என்ன கோபம்? என்ற கேள்வி ரசிகர்களுக்கு மட்டுமல்ல தனுஷுக்கும் கூட உள்ளதாம்.