Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கவர்ச்சி படங்களை வெளியிட்ட நண்பன் பட நடிகைக்கு இத்தனை கோடி சம்பளமாம்!

விஜய் நடித்த நண்பன் படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானவர் நடிகை இலியானா. அந்த சமயத்தில் காமெடி நடிகராக இருந்த சந்தானம் கூட தான் ஜோக் அடிக்கும் போது இலியானாவில் பெயரை குறிப்பிடுவார்.

இலியானாவின் பெயர் பல சர்ச்சைகளில் அடிபட்டது. ஆனால் அவர் பொறுமையாக சமாளித்து வருகிறார். ஆனால் சமூகவலைதளங்களில் அடிக்கடி தன் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு அசத்துவார்.

இந்நிலையில் அவர் அடுத்தாக தெலுங்கில் பிரபல நடிகர் ராம் தேஜாவுடன் அமர் அகபர் அந்தோனி படத்தில் ஜோடியாக நடிக்கிறார். இப்படம் சிம்பு நடித்த AAA படத்தின் ரீமேக்.

வரும் ஜூன் 18 முதல் அவர் அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஷூட்டிங்கில் கலந்துகொள்கிறாராம். இப்படத்திற்காக அவர் ரூ 2 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.