Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணதியுடன் நடிக்கும் பாகுபலி படத்தின் பிரபல நடிகர்!

ஆர்யா பங்கேற்ற எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்று முடிந்தது. இதில் ஆர்யாவை மட்டுமல்ல பலரின் மனங்களை ஈர்த்தவர் அபர்ணதி.

இனி அடுத்தாக புதிய படத்தில் ஜி.வி.பிரகாஷ்க்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். விரைவில் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கப்படவுள்ளது. அண்மையில் வந்த இதன் செய்திகள் மிகவும் ஹைலைட்.

அங்காடி தெரு, அரவான், வெயில் என முக்கிய படங்களை எடுத்த வசந்தபாலன் இப்படத்தை இயக்குகிறார். இதில் பசங்க படத்தின் இயக்குனர் பாண்டிராஜும் இணைந்துள்ளார்.

தற்போது இப்படத்தில் பாகுபலி படத்தின் பிரபல நடிகர் பிரபாகர் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளாராம். இவரை தெரியவில்லையா. அதாங்க காலகேயாவாக நடித்தாரே. அவரே தான்..