Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கவர்ச்சி நடிகை சன்னிலியோனுக்கு இவ்வளவு பெரிய சோகமாம்!

கவர்ச்சியாக நடித்து பலரின் மனதை ஈர்த்தவர் நடிகை சன்னி லியோன். இந்தியா முழுக்க அவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். தற்போது வீரமாதேவி என்னும் படத்தில் நடித்து வருகிறார்.

தமிழ், தெலுங்கில் இப்படம் எடுக்கப்படுகிறது. அவரின் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. ஆனால் பொதுமக்கள் மத்தியில் பல நேரங்களில் அவருக்கு எதிர்ப்பு இருந்திருக்கிறது.

இதனால் முன்னணி நடிகர்கள் பலர் சன்னியை தங்கள் படங்களில் நடிக்கவைக்க தயங்குகிறார்கள். இதனால் செக்ஸ் பட நடிகை என்ற தன் மீது சுமத்தப்பட்ட விசயத்தை மாற்ற கடும் முயற்சியில் இருக்கிறாராம்.

மேலும் வீரமாதேவி படத்தில் அவரின் சொந்த வாழ்க்கையும் அடங்கியிருக்கிறதாம். இதில் அவர் கவர்ச்சி நடிகையாக மாற வேண்டிய சூழ்நிலை என்ன என காட்டியிருக்கிறார்களாம்.

இப்படத்தை சன்னிலியோனுக்கு தனியே போட்டு காண்பித்துள்ளார்கள். இதை பார்த்துவிட்டு மனம் உடைந்து அழுதிருக்கிறார். மேலும் அவர் 1000 தடவை மனம் நொந்து அழுதேன்.

நான் செய்த சில விசயங்களை நினைத்து வருத்தப்படுகிறேன் என அவர் கூறியுள்ளார். மேலும் அவரின் வாழ்க்கை வரலாறு டிவி தொடராக விரைவில் முக்கிய சானலில் வரவுள்ளதாம்.