Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தனுஷ் இந்த படத்தில் நடிக்கவே வேண்டாம் என பிரபல நடிகர் கூறியதால் கவலையான தனுஷ்

நடிகர் தனுஷ் இப்போது ஹாலிவுட் வரை சென்றுவிட்டார். அவர் ஆங்கிலத்தில் நடித்துள்ள The extraordinary journey of the fakir வரும் மே 30 தேதி வெளியாகவுள்ளது.

ஏற்கனவே பாலிவுட் படத்தில் நடித்த அவர் தமிழில் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குனர் என தன் திறமைகளை காட்டி வருகிறார். ரஜினி நடித்து தனுஷ் தயாரித்துள்ள காலா படம் வரும் ஜூன் 7 ல் வெளியாகவுள்ளது.

இப்படத்தில் ஒரு ரோலில் நடித்துவிட வேண்டும் என்ற ஆசை தனுஷ்க்கு இருந்ததாம். இதை இயக்குனர் ரஞ்சித்திடம் சொல்ல, அவரும் விசயத்தை சூப்பர் ஸ்டாரிடம் சொல்ல, அவர் இதில் நடிக்க வேண்டாம்.

படத்தை தயாரித்தால் போதும் என சொல்லிவிட்டாராம். உடனே தனுஷும் அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என அமைதியாக இருந்துவிட்டாராம்.

ஆனால் அவரின் படத்தில் சேர்ந்து நடிக்க முடியவில்லையே என்ற வருத்தம் தனுஷுக்கு இருந்ததாம்.