Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கும்கி 2 இல்லையா? பிரபு சாலமன் படம் பற்றி வந்த அதிர்ச்சி தகவல்

மைனா, கும்கி உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபு சாலமன் கடைசியாக இயக்கிய தொடரி படம் மோசமான விமர்சனங்களை சந்தித்து பாக்ஸ் ஆபிஸில் தயாரிப்பாளருக்கு கடும் நஷ்டத்தை கொடுத்தது.

இந்நிலையில் அடுத்து அவர் கும்கி 2 படத்தை இயக்கி வருவதாக கூறப்பட்டது. இந்த படத்தில் விஷ்ணு விஷால், ராணா டகுபதி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்து வருகிறார்கள் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது நடிகர் விஷ்ணு வெளியிட்டுள்ள அறிவிப்பு பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. யானை மீது அமர்ந்தபடி ஒரு புகைப்படத்தை எடுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் அவர். மூன்று மொழிகளில் உருவாகும் இந்த படம் கும்கி 2ம் பாகம் இல்லை என தெரிவித்துள்ளார்.