Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்த ரஜினி பட கதையை வைத்து தான் ரங்கஸ்தலம் படம் எடுத்தேன்! இயக்குனர் கூறிய அதிர்ச்சி தகவல்

சமீபத்தில் வெளியான ராம் சரண் மற்றும் சமந்தா ஆகியோர் நடித்திருந்த ரங்கஸ்தலம் படம் தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் செம ஹிட். இந்த படம் தான் 2018ன் முதல் 100 கோடி படம். ரங்கஸ்தலம் உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் ஈட்டியுள்ளது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் கதை என்னுடையது என M.காந்தி என்ற எழுத்தாளர் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு விளக்கம் அளித்துள்ள ரங்கஸ்தலம் இயக்குனர் சுகுமார், "நான் யாரிடமிருந்தும் கதையை திருடவில்லை. இந்த படம் என் கற்பனையில் இருந்து வந்தது. ரஜினிகாந்த் மற்றும் ஸ்ரீதேவி நடித்த தர்மயுத்தம் படத்தின் கதையை கருவாக வைத்து தான் இந்த கதையை எழுதினேன். வில்லனை கடைசி வரை நன்றாக பார்த்துக்கொண்டு கிளைமாக்சில் கொல்வது போல படத்தை வடிவமைத்தேன்" என கூறியுள்ளார்.