Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் சேதுபதி, நயன்தாரா படக்குழுவை துக்கத்தில் ஆழ்த்திய மரணம்! புகைப்படம் உள்ளே

விஜய் சேதுபதி ஏற்கனவே நயன்தாராவுடன் ஜோடியாக நானும் ரவுடி படம் மூலம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தார்கள். அவர்கள் இருவரும் ஒரே படத்திற்காக தற்போது கூடியிருக்கிறார்கள்.

ஆனால் ஹீரோ விஜய் சேதுபதி அல்ல. தெலுங்கில் எடுக்கப்பட்டு வரும் படம் சயீரா நரசிம்ம ரெட்டி. இதில் சிரஞ்சிவி, அமிதாப் பச்சன், நயன்தாரா என பலர் நடித்து வருகிறார்கள்.

இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு முக்கிய வேடம் கொடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஒரு அழகான காளை மாடு பயன்படுத்தப்பட்டுள்ளது. இக்காளை ஏற்கனவே பவன் கல்யாண் நடித்த கட்டமாரயுடு படத்தில் நடித்துள்ளது.

வேறெங்கும் இல்லாத உயர்ந்த ரக இனத்தை சேர்ந்த இந்த காளை Ghantasalapalem என்ற இடத்தில் இறந்துவிட்டது. ஒரு வார காலமாக உடல் நிலை சரியில்லாமல் இறந்துவிட்டதாம்.

பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் நவநாத கிருஷ்ணா என்பவருக்கு சொந்தமானதாம். இக்காளை மறைவால் ஊர் மக்கள், படக்குழு என பலரும் கவலையில் இருக்கிறார்கள்.

மேலும் இக்காளையை போலவே உடன் பிறந்த இன்னொரு காளையும் இருக்கிறதாம்.