Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினிகாந்தின் காலா படத்திற்கு மீண்டும் வந்த பிரச்சனை! முக்கிய நபரால் பரபரப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படம் ஜூன் 7 ம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கான வேலைகள் பரபரப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

மும்பை வாழ் தமிழரான திரவியம் நாடார் என்பவரின் கதையை மையமாக வைத்து படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

திரவியம் நாடாரின் மகனான ஜவஹர் என்பவர் படத்தின் கதை தன்னுடைய அப்பா சம்மந்தப்பட்டது. அவர் தாராவி தமிழ் மக்களுக்கு பல நல்ல விசயங்களை செய்துள்ளார்.

அவர்களை பொறுத்தவரை அவர் தெய்வம். படத்தில் கூடுவாலா சேட் பற்றி கூறியுள்ளார்கள். சீனி, சக்கரை வர்த்தகத்தில் மிகப்பெரிய ஆளாக திகழ்ந்தவர் அவர்.

அவருக்கும் காலாவுக்கும் என்ன சம்மந்தம் என்பதற்கு படக்குழு விளக்கமளிக்க வேண்டும். இல்லையேல் வழக்கு நீடிக்கும். படம் வெளியாக அனுமதிக்க மாட்டேன். மேலும் அவதூறுக்காக ரூ 100 கோடி தரவேண்டும் என கூறியுள்ளார்.