Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காலாவிற்கு வெளிநாடுகளிலும் தடை? ரஜினிக்கு புதிய சிக்கல்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் காலா படம் வரும் 7ம் தேதி திரைக்கு வருகிறது. அதனால் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

ஆனால் சமீபத்தில் நடத்த தூத்துக்குடி துப்பாக்கிசூடு பற்றிய அவரின் அரசியல் கருத்துகளுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது.

போராட்டம் நடத்துபவர்களை இரும்பு கரம் கொண்டு ஒதுக்கவேண்டும், போராட்டம் நடத்தினால் தமிழ்நாடு சுடுகாடாகும் என அவர் கூறிய கருத்துக்கு தமிழர்கள் மத்தியில் அதிகம் எதிர்ப்பு வந்துள்ளது.

'காலா படத்தை நார்வேயில் திரையிடமாட்டோம்' என்று நார்வே தமிழ்த் திரைப்பட விநியோகஸ்தர் குழு தெரிவித்துள்ளது. மேலும் சுவிட்சர்லாந்திலும் காலா படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.