Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தனுஷ் விளைவுகளை சந்திக்க வேண்டும்: கர்நாடக முதலமைச்சர் எச்சரிக்கை

நடிகர் ரஜினிகாந்தின் காலா படம் கர்நாடகத்தில் வெளியிடுவது பற்றி பேச்சுவார்த்தை நடத்த நடிகர் விஷால் தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

மேலும் தனுஷ் கர்நாடக உயர்நீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு இன்று வந்தது. அதில் 'யாரையும் காலா படத்தை கண்டிப்பாக வெளியிட வேண்டும் என வற்புறுத்த முடியாது. ஆனால் படம் வெளியாகும் திரையரங்குகுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும்" என கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இது பற்றி கருத்து தெரிவித்துள்ள கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி "காலா படத்தை வெளியிட பிறப்பிக்க உத்தரவு நகல் இன்னும் கிடைக்கவில்லை. கர்நாடக முதல்வர் என்ற முறையில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்ற வேண்டியது என் பொறுப்பு. ஆனால், தனிப்பட்ட முறையில் என்னைப் பொறுத்தவரை, இந்த சூழ்நிலையில் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டாம். இது தயாரிப்பாளருக்கும் விநியோகஸ்தர்களுக்கும் நல்லதல்ல. அதை மீறி வெளியிட்டால் அதன் விளைவுகளைத் தயாரிப்பாளர் எதிர்கொள்ள வேண்டும்" என அவர் கூறியுள்ளார்.