Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அவருக்கு ஜோடியாக எல்லாம் நடிக்க முடியாது: ஏன் அப்படி கூறினார் டாப்ஸி?

தமிழில் ஆடுகளம் படத்தில் அறிமுகமானவர் நடிகர் டாப்ஸி. அவர் தற்போது பாலிவுட்டில் பிஸியாகிவிட்டதால் தென்னிந்திய சினிமா பக்கம் தலைகாட்டுவதில்லை.

இந்நிலையில் அவர் சமீபத்தில் நடிகர் நவாஸுதீன் சித்திக்குடன் நடிக்க மாட்டேன் என கூறியதாக செய்திகள் பரவியது. Honey Trehan என்ற இயக்குனர் ஒரு கதையை டாப்ஸியிடம் கூறியுள்ளார். ஹீரோ யார் என அவரிடம் கேட்டார் டாப்ஸி. நவாஸுதீன் சித்திக் என கூறியதும் "அவருக்கு ஜோடியாக நடிக்க விருப்பமில்லை" என கூறி மறுத்துவிட்டாராம்.

ஆனால் நவாஸுதீன் சித்திக் "அப்படி ஒரு கதையுடன் யாரும் என்னை அணுகவில்லை" என ட்விட்டரில் கூறியுள்ளார்.