Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினி-கார்த்திக் சுப்புராஜ் படத்தில் பாகுபலி ஸ்டண்ட் மாஸ்டர்

நடிகர் ரஜினிகாந்த் அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்துவருகிறார். இதன் ஷட்டிங் வட மாநிலங்களில் நடந்து வருகிறது.

இந்த படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் ஸ்டண்ட் மாஸ்டராக பீட்டர் ஹெய்ன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது படக்குழுவுடன் இணைந்துள்ளார்.

பீட்டர் ஹெய்ன் இதற்குமுன் சிவாஜி, எந்திரன், பாகுபலி உள்ளிட்ட பல மெகா பட்ஜெட் படங்களில் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. அதனால் இந்த படத்தின் சண்டை காட்சிகள் மிரட்டலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.