Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழ்ராக்கர்ஸை முடக்க தயாரிப்பாளர் சங்கம் எடுத்த முயற்சி! ஆனால் இப்படி ஆகிவிட்டதே..

தமிழ் சினிமா துறை பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறது. டிக்கெட் விலை மிக அதிகம் என தியேட்டர் பக்கம் போவதையே பலர் நிறுத்திவிட்டனர். இதனால் தயாரிப்பாளர்களுக்கு வரும் நஷ்டம் ஒருபுறமிருந்தாலும், திருட்டு தனமாக படங்களை வெளியிடும் இணையதளமான தமிழ்ராக்கர்ஸ் ஏற்படுத்தும் நஷ்டம் தான் அதிகம்.

இந்நிலையில் தமிழராக்கர்ஸ் இணையத்தளத்தை முடக்கிவிட்டதாக தயாரிப்பாளர் சங்கம் இன்று மாலை அறிவித்தது. ஆனால் கொஞ்ச நேரத்திலேயே அந்த இணையத்தளம் மீண்டும் வேறு லிங்கில் மீண்டும் இயங்க துவங்கிவிட்டது.

இதை பார்த்த பலரும் சமூக வலைத்தளங்களை தயாரிப்பாளர் சங்கத்தை விமர்சித்து வருகின்றனர். அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளனர்.