Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பல வருடங்களுக்கு பிறகு இளம் நடிகருடன் மீண்டும் இணையும் ஹன்சிகா!

நடிகை ஹன்சிகா மோத்வாணி தமிழ் சினிமா பப்ளி நடிகையாக வலம் வந்தவர். ஒரு நேரத்தில் இவரின் மார்க்கெட் ஓஹோவென இருந்தது. குட்டி குஷ்பு எனவும் இவரை அழைத்தனர்.

விஜய், சிம்பு என பிரபல நடிகர்களுடன் நடித்து வந்தார் இவர். ஆனால் இவரின் மார்க்கெட் கடந்த சில வருடங்களாகவே சரிவர இல்லாமல் போனது. ஆனால் ஒரு சில படங்களில் நடித்து வந்தார்.

அந்த படங்களும் எதிர்பார்த்த வெற்றி தரவில்லை. இந்நிலையில் அவர் தற்போது மீண்டும் தெலுங்கு பக்கம் சென்றுள்ளாராம். இயக்குனர் வெங்கி இயக்கும் இப்படத்தில் நிதின் ஹீரோவாக நடிக்கிறார்.

இவர் ஜெயம் படத்தின் தெலுங்கு ரீமேக் மூலம் ஹீரோவாகி பிரபலமானவர். இப்படம் சூப்பர் ஹிட்டானது. இவரும் ஹன்சிகாவும் Seetharamula Kalyanam Lankalo என்ற படத்தில் 8 வருடத்திற்கு முன்பு இணைந்து நடித்தவர்கள்.