Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

308 பெண்களுடன் உறவில் இருந்த பிரபல நடிகர்! வெளியான ரகசிய உண்மை மோசடி இதோ

பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகர் சஞ்சய் தத்தை பலருக்கும் தெரிந்திருக்கும். தற்போது அவருக்கும் வயதாகிவிட்டது. அவரின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட்டுள்ளது.

இதில் அவராக இளம் நடிகர் ரன்பீர் கபூர் நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் சஞ்சய் தத் 308 பெண்களுடன் உறவில் இருந்தார் என்பது போல காட்டப்பட்டுள்ளது.

ஆனால் நிஜத்தில் உண்மை என்ன என்பதை இயக்குனர் கூறியுள்ளார். சஞ்சய் பாலிவுட் சினிமாவில் பல பெண்களை காதலித்தார். இதில் மாதுரி தீட்சித் போன்ற பிரபல நடிகைகளும் இருக்கிறார்கள்.

உண்மையில் சஞ்சய் தத் பெண்களை கவர்வதற்காக டேட்டிங் செய்வாராம். அவருடன் வரும் அந்த பெண்ணை ஒரு கல்லறைக்கு அழைத்து செல்வாராம். அந்த பெண்ணிடம் இது தன் தாயின் கல்லறை என்பாராம்.

என் அம்மாவை நீ சந்திக்க வேண்டும் என்பதற்காகவே தான் இங்கு அழைத்து வந்தேன் என கூறுவாராம். ஆனால் பெண்கள் தன்னை நேசிக்க வேண்டும் என்பதற்காக அவர் செய்யும் தில்லு முல்லு வேலை இது தானாம்.

இப்படத்தில் நடித்துள்ள ரன்பீருக்கு பாரட்டுக்கள் குவிந்துள்ளது. சஞ்சயாகவே அவர் மாறியுள்ளார். இந்த Bio Pic சினிமா வரும் ஜூன் 29 ல் வெளியாவுள்ளது.