Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

படத்தில் பாலியல் உச்சத்தின் பின்னணியில் வந்த விசயம்! சர்ச்சையான காட்சி - பிரபலத்தின் குடும்பம் கடும் கொந்தளிப்பு

பாலிவுட் சினிமா எல்லை கடந்து போகிறதோ என சொல்லுமளவுக்கு சில காட்சிகளில் படங்களில் அமைக்கப்பட்டு வருகின்றன. அண்மையில் பிரபல இயக்குனர் கரன் ஜோஹர் லஸ்ட் ஸ்டோரீஸ் என்ற பெயரில் குறும்படத்தை வெளியிட்டுள்ளார். இதில் ஒரு காட்சியில் நடிகை கியாரா அத்வானி ட்ச்சராக வருகிறார்.

அவர் சுய இன்பத்தில் ஈடுபடுவது போல காட்சிகள் இப்படத்தில் இருக்கிறது. ஏற்கனவே இந்த காட்சிகளால் பெண்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பது. சமூகவலைதளங்களிலும் இது குறித்து சர்ச்சை மூண்டது.

இந்நிலையில் இந்த காட்சியின் பின்னணியில் பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் பாடிய கபி குஷி கபி கம் பாடலை போட்டுள்ளார்கள். இதனால் அவரின் குடும்பத்தாரிடையே பெரும் சங்கடம் சூழ்ந்தது.

இதனால் அவர்கள் தற்போது அந்த காட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் பலரும் மதிக்கும் இந்த சூப்பர் ஹிட் பாடலை இப்படி ஒரு காட்சிக்கு பயன்படுத்துவதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

கரண் ஜோஹர் இயக்கிய படத்தில் கபி குஷி கபி கம் படத்தில் தான் இந்த பாடலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.