Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தூற்றியவர்கள் மத்தியில் போற்ற வைக்கும் அஜித்தின் சாதனை!

அஜித் தற்போது சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் நடித்து வருகிறார். இதன் அடுத்தகட்ட படப்பிடிப்புகள் சென்னை, ஹைதராபாத் ஆகியிடங்களில் எடுக்கப்படவுள்ளது.

இதே சிவா கூட்டணியில் அஜித் கடைசியாக விவேகம் படத்தில் நடித்திருந்தார். இந்தப்படம் ஹாலிவுட் ஸ்டைலில் உருவாக்கப்பட்டது. ஆனால் படத்தில் சில விசயங்கள் கடும் விமர்சனங்களுக்குள்ளானது.

இது ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தம் தான். இதனால் இயக்குனர் சிவா மீது அவர்கள் கோபத்தில் இருக்கிறார்கள். ஆனால் இதே விவேகம் படம் ஹிந்தியில் டப் செய்யப்பட்டு வெளியானது.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதை பார்த்தவர்களின் எண்ணிக்கை தற்போது 30 மில்லியனை கடந்துள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.