Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு இப்படி ஒரு வரவேற்பா! சூப்பரான செய்தி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் இமயமலை பகுதியில் நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து வருகிறார். இப்படத்தில் படபிடிப்பு பணிகள் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறதாம்.

படப்பிடிப்பு தளத்திற்கு வரும் ரஜினியை சந்திக்க தினமும் நிறைய ரசிகர்கள் கூடுகிறார்களாம். மேலும் அவர் தங்கியிருக்கும் விடுதி பகுதியிலும் கூட்டம் கூடுகிறதாம்.

நேற்று மாலை டார்ஜிலிங் பகுதியில் நடைபெற்ற ஷூட்டிங்கை முடித்து விட்டு ரஜினி அருகில் இருக்கும் கிறிஸ்தவ தேவாலயத்திற்கு சென்றாராம்.

40 நாட்கள் தொடர்ந்து இப்பகுதியில் ஷூட்டிங் நடைபெறுகிறதாம்.