Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்தியன் 2 படத்தில் இணையும் முன்னணி பாலிவுட் ஹீரோ?

தற்போது நடிகர் கமல்ஹாசன் விஸ்வரூபம் 2 படத்தின் ரிலீசுக்கான பணிகளை செய்து வருகிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் பாடல்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.

அடுத்து ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கவுள்ள இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் விரைவில் துவங்கவுள்ள நிலையில் தற்போது ஒரு முன்னணி பாலிவுட் நடிகரை நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடந்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் அஜய் தேவ்கானை தான் ஷங்கர் அண்ட் டீம் அணுகியுள்ளது. இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நயன்தாரா ஹீரோயின் வேடத்தில் நடிக்கலாம் என முன்பே தகவல் வந்தது குறிப்பிடத்தக்கது.