Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அந்த நடிகையுடனா? வேண்டாம்.. கணவருக்கு ஐஸ்வர்யா ராய் போட்ட கண்டிஷன்!

உலக அழகியாக தேர்வாகி பின்னர் சினிமா துறையை கலக்கியவர் நடிகை ஐஸ்வர்யா ராய். இவருக்கு பிறகு 6 ஆண்டுகள் கழித்து உலக அழகி பட்டம் வென்றவர் பிரியங்கா சோப்ரா.

சினிமா துறையில் முன்னணி நடிகைகளாக உள்ள இவர்கள் இருவருக்கும் பனிப்போர் நடப்பதாக பல வருடங்களாகவே பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது ஐஸ்வர்யா ராயின் கணவர் அபிஷேக் பச்சன் பிரியங்கா சோப்ராவுக்கு ஜோடியாக The Sky Is Pink என்ற படத்தில் நடிக்கவிருந்தார்.

ஆனால் ஐஸ்வர்யா ராய் இந்த படத்தில் நிச்சயம் நீ நடிக்கக்கூடாது என கண்டிஷன் போட்டுவிட்டாராம். அதனால் அபிஷேக் வேறு வழியில்லாமல் இந்த படத்தை ஒப்புக்கொள்ளவில்லையாம். தற்போது அவர் இடத்துக்கு பர்ஹான் அக்தர் தேர்வாகியுள்ளார்.