Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழ் படம் 2விலிருந்து அந்த முக்கிய காட்சி நீக்கப்பட்டதாம்!

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே கடந்த வியாழக்கிழமை அதிகாலை காட்சியுடன் வெளியான படம் தமிழ் படம் 2. எப்படியான ஒரு வரவேற்பு கிடைத்து வருகிறது என்பது உங்களுக்கே தெரிந்திருக்கும்.

படத்தில் மொத்த தமிழ் சினிமாவின் முக்கிய படங்களையும் பிரதிபலித்திருந்தார்கள். முன்னணி நடிகர்கள், நடிகைகளை கூட கலாய்த்திருந்தார்கள். இப்படத்தில் அரசியல் கூத்துக்களையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை.

இதில் எதிர்கட்சி தலைவரை கலாய்ப்பது போல ஒரு காட்சி இருந்தது. இதற்கு சம்மந்தப்பட்ட அரசியல் தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இந்நிலையில் படத்திலிருந்து அந்த காட்சி நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.