Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் படங்களால் திரிஷாவுக்கு கிடைத்த பெரும் வரவேற்பு!

அஜித் தமிழ் சினிமாவில் தன்னிகரற்ற நடிகராக இருக்கிறார். அவருக்கென ரசிகர் மன்றங்கள் கிடையாது. சமூக வலைதள பக்கங்கள் கிடையாது. படங்களில் நடிப்பதில் மட்டுமே அவரின் கவனம் இருக்கும்.

அஜித்திற்கு சில படங்கள் முக்கியத்துவமாக அமைந்தது. இதில் கிரீடம், என்னை அறிந்தால் என அழகான காதல் கதையாக அமைந்தது. இந்த இரண்டிலும் திரிஷா தான் அவருக்கு ஜோடி.

இப்படங்களில் திரிஷாவின் நடிப்பால் ஈர்க்கப்படவர் இயக்குனர் பிரேம். இவர் தான் விஜய்சேதுபதி, திரிஷா நடிக்கும் 96 படத்தின் இயக்குனர். அண்மையில் வெளியான இப்படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தோடு 3 மில்லியன் பார்வைகளை தாண்டியது.

96 படக்கதைக்கு திரிஷா தான் பொருத்தமாக இருப்பார் என இயக்குனர் தேர்வு செய்தாராம். காரணம் அஜித்துடன் திரிஷா நடித்த அந்த இரண்டு படங்கள் தானாம்.

96 படத்தின் மூலம் மீண்டும் திரிஷா ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கலாம்.