Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அமைதியான நேரத்தில் அஜித் ரசிகர்களின் மறக்க முடியா நினைவுகள்!

அஜித் ரசிகர்கள் மன்றங்கள் இல்லாவிட்டாலும் ஒரு இயக்கமாக கூடி சமூக நல விசயங்களை செய்து வருகின்றனர். தற்போது அஜித்தின் 26 ம் வருட சினிமா பயணத்தை கொண்டாடி வருகிறார்கள்.

அஜித்தின் படங்களில் சில படங்கள் மனதில் ஈர்க்கப்பட்டது. அதில் ஒன்று கிரீடம். ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கடந்த 2007 ல் இப்படம் இதே ஜூலை 20 ம் நாள் வெளியானது.

இதில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்க அஜித்துக்கு அப்பாவாக ராஜ் கிரணும் அம்மாவாக சரண்யாவும் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் பாடல்கள் வெளியானது.

இது மலையாளம், கன்னடம், ஹிந்தியிலும் ரிமேக் ஆன படம். இதனை ரசிகர்கள் 11 ம் வருட கொண்டாட்டமாக நினைவு கூர்ந்துள்ளார்கள்.