Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் சேதுபதியின் புதிய விளம்பர யுக்தி!

தமிழ் சினிமாவில் அதிக படங்களில் நடித்து வரும் நடிகர் விஜய் சேதுபதி. இவரின் படங்கள் எத்தனை வந்தாலும் அத்தனை படத்தையும் மக்களிடம் கொண்டு சேர்க்க தயாரிப்பாளருக்கு உதவியாக இருப்பார்.

அப்படியிருக்க அவரே தயாரிப்பாளராக மாறிய ஜுங்கா படத்துக்கு இன்னும் அதிகமாக பாடுபட்டு வருகிறார்.

நேர்காணல் கொடுத்துவரும் விஜய் சேதுபதி சமூகவலைதளங்களில் புதிய போட்டியை அறிவித்துள்ளார். அதில் ஜுங்கா என்ற பெயரை 10 நொடிக்குள் எத்தனை முறை சொல்கிறீர்கள் என #JungaMeter என்ற போட்டியை அறிவித்த விஜய் சேதுபதி 23 முறை கூறியுள்ளார்.

அதிகமுறை சொல்பவர்களுக்கு இலவச டிக்கெட்டுகளும், பரிசுகளும் காத்திருக்கிறதாம்.