கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இது ஒருபுறம் இருக்க அவர் அரசியல் கட்சி துவங்கி நடத்தி வருகிறார். அதுமட்டுமின்றி அவர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடிக்கவுள்ளார்.
ஏற்கனவே கமலின் பல படங்கள் இன்னும் ரிலீஸ் ஆகாமல் உள்ள நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் எப்போது துவங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் இந்தியன் 2 பற்றி முக்கிய அறிவிப்பை வெளியிட்டார் கமல். பிக்பாஸ் முடிந்தபிறகு இந்தியன் 2 துவங்கும் என அவர் கூறியுள்ளார்.
இந்த அறிவிப்பால் ரசிகர்கள் தற்போது குஷியாகியுள்ளனர்.