Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சர்கார் படத்தில் இவர்தான் வில்லனா?

நடிகர் விஜய்யின் சர்கார் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. படம் தீபாவளிக்கு வரவுள்ள நிலையில், சர்கார் பற்றிய புதிய தகவல்கள் தினம்தோறும் வந்தவண்ணம் உள்ளன.

இன்று முதல் விஜய் சர்காருக்காக டப்பிங் பேசவுள்ளார். இந்நிலையில் தற்போது இந்த படத்தில் வில்லனாக ஏழாம் அறிவு புகழ் நடிகர் Johnny Trí Nguyễn நடிக்கிறார் என சமூக வலைத்தளத்தில் தகவல் பரவி வருகிறது. அவரின் விக்கிப்பீடியா பக்கத்தில் சர்கார் படத்தில் நடிப்பதாக குறிப்பிடப்பட்டிருப்பது தான் இதற்கு காரணம்.

மேலும் Johnny Trí தமிழில் அறிமுகப்படுத்தியது முருகதாஸ் தான். அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்துள்ளாரோ என்ற பேச்சும் கோலிவுட் வட்டாரத்தில் உள்ளது.

இது உண்மையா என்பது படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தால் தான் தெரியவரும்.