Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உறவுகளின் பெருமையை உன்னதமாய் சொல்லும் மணியார் குடும்பம்!

குடும்பப்பாங்கான கதைகளுக்கு எப்போதும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும். இதை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படங்கள் வெற்றி பெற்றிருக்கிறது.

இதற்கு உதாரணமாக பல படங்களை சொல்லலாம். அந்த வகையில் மணியார் குடும்பம் என்ற புதிய படம் வரும் ஆகஸ்ட் 3 ல் வெளியாகியுள்ளது. குடும்ப கதையை கிராம பாரம்பரியத்துடன் எடுத்து சொல்கிறது இப்படம்.

பிரபல நடிகர் தம்பி ராமையா தன் மகன் உமாபதியை ஹீரோவாக அறிமுகமாக்கி அவரே இசையமைத்து, பாடல்களை எழுதியுள்ளார். ஹீரோவும் நடிப்பு, நடனம் என சில படங்களில் நடித்த அனுபவம் உள்ளது போல தன்னை காட்டியுள்ளார் என்பதை ட்ரைலர் சொல்கிறது.

மேலும் பிக்பாஸ் புகழ் யாஷிகா ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். உடன் சமுத்திர கனி, மேயாத மான் விவேக் பிரசன்னா என பலர் இப்படத்தில் இணைந்துள்ளார்கள்.

நடிகர் தம்பி ராமையாவுக்கும் ஒரு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. இப்படத்தில் அவர் தன் மகனுக்கு அப்பாவாக நடித்துள்ளார். பல படங்களில் சிறப்பான தோற்றத்தில் நடித்து தன் காமெடியின் மூலம் மக்களை மகிழ்வித்துள்ளார்.

முரளி நடித்த மனுநீதி படத்தின் மூலம் இயக்குனராக தன்னை வெளிப்படுத்திய அவர் இந்திரலோகத்தில் நா அழகப்பன் படத்தை தொடர்ந்து தற்போது மணியார் படத்தின் மூலம் மீண்டும் இயக்குனராக பிரவேசித்துள்ளார்.

வாழ்த்துக்கள் தம்பி ராமையா சார்.. உங்கள் முயற்சி வெற்றி பெறட்டும்...