Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தீபாவளிக்கு மெர்சலாக களத்தில் இறங்கும் சர்க்கார்! தள்ளிப்போகும் முக்கிய நடிகரின் படம்?

விஜய் நடிப்பில் சர்க்கார் வரும் நவம்பர் மாதம் தீபாவளி ரிலீஸாக வெளியாகிறது. இப்படத்திற்கான படபிடிப்புகளும் வேலைகளும் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது.

ஏற்கனவே சர்ச்சைகளும் தொடங்கிவிட்டன. இந்நிலையில் அதே தீபாவளியன்று அஜித் நடிக்கும் விசுவாசம் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டு பின் பொங்கல் ரிலீஸ் என கூறப்பட்டது.

மேலும் சர்க்கார் படத்துடன் சூர்யா நடிப்பில் NGK படமும் வெளியாவதாக இருந்தது. செல்வராகவன் இயக்கி வரும் இப்படத்தின் படபிடிப்புகள் 60% முடிந்துவிட்டது.

ஆனால் சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்ட செல்வராகவனுக்கு Appendix ஆப்ரேசன் செய்யப்பட்டுள்ளதாம். இதனால் அவருக்கு சில நாட்கள் ஓய்வு எடுக்கவேண்டிய நிலை உள்ளதாம்.

இதனால் NGK படம் தள்ளிப்போகும் என சொல்லப்படுகிறது. ஆனால் இயக்குனர் செல்வராகவன் தன் ட்விட்டர் பக்கத்தில் ஹாய் ஃபிரண்ட்ஸ். இது எளிமையான மருத்துவ முறை. நான் நலமாக இருக்கிறேன். அடுத்த இரு நாட்களில் NGK படப்பிடிப்புக்கு திரும்பிவிடுவேன். உங்கள் அன்பிற்கு நன்றி என கூறியுள்ளார்.